கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ + "||" + Bangladesh declare 541 in Tests against Sri Lanka

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 173 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முஷ்பிகுர் ரஹிம் 68 ரன்னுடனும், தஸ்கின் அகமது 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 73 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணாரத்னே 85 ரன்னுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 26 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
2. கொழும்பு துறைமுக விரிவு ஒப்பந்தம் : சீன நிறுவனத்துக்கு வழங்கியது இலங்கை அரசு
இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது
3. இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு!
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது.
4. இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறி வருகிறது.