கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 324 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + South Africa Set West Indies 324 To Win Second Test

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 324 ரன்கள் வெற்றி இலக்கு

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 324 ரன்கள் வெற்றி இலக்கு
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 324 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயின்ட் லூசியா, 

தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 298 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 149 ரன்னில் சுருண்டது. அடுத்து 149 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது நாளான நேற்று பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 53 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் வாண்டர் டூசன் 75 ரன்களும், ரபாடா 40 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டிஸ் அணியில் அதிகபட்சமாக ரோச் 4 விக்கெட்டுகளும், மேயர்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து வெஸ்ட்இண்டிஸ் அணி வெற்றி பெற 324 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அடுத்து களமிறக்கிய வெஸ்ட்இண்டிஸ் அணியில் பிரித்வொயிட் 5 ரன்களும், கேரன் பவல் 9 ரன்களும் எடுத்திருந்தநிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இறுதியில் வெஸ்ட்இண்டிஸ் அணி 6 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணி, தென் ஆப்பிரிக்கா அணியை விட 309 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவில் குறையும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரசின் 2-ம் அலை பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
2. தென்ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
தென்ஆப்பிரிக்காவில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: 158 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 158 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.