கிரிக்கெட்

ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது + "||" + Harbhajan Singh, Geeta Basra "Blessed With A Baby Boy"

ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரார் ஹர்பஜன் சிங். கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஹர்பஜன்சிங், தொடர்ந்து இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழும் ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகையான கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது திரைத்துறையின் பக்கம் கவனத்தை செலுத்தி வரும் ஹர்பஜன்சிங், தமிழில் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்து தமிழக ரசிகர்களின் கவனத்தையும் ஹர்பஜன் சிங் ஈர்த்து வருகிறார் 

இந்நிலையில் ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும்நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.