கிரிக்கெட்

பரோடா அணியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணியில் இணைந்தார் தீபக் ஹூடா + "||" + Deepak Hooda cuts ties with Baroda, to play for Rajasthan now

பரோடா அணியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணியில் இணைந்தார் தீபக் ஹூடா

பரோடா அணியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணியில் இணைந்தார் தீபக் ஹூடா
பரோடா அணியில் இருந்து விலகிய தீபக் ஹூடா, ராஜஸ்தான் அணியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி, 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டன் குருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறினார். இதனால் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பரோடா அணியிலிருந்து தீபக் ஹூடா விலகியுள்ளார். ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் தீபக் ஹூடா விளையாடியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இனிமேல் முதல் தர போட்டியில் ராஜஸ்தான் மாநில அணிக்காக விளையாட முடிவு செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ள தீபக் ஹூடா இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 116 ரன்கள் எடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேச பா.ஜ.க. துணை தலைவர் கட்சி பதவியில் இருந்து விலகல்
இமாசல பிரதேச பா.ஜ.க. துணை தலைவர் தனது கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
3. டேனியல் கிரெய்க் விலகல் - புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவரா?
நோ டைம் டூ டை படத்தில் நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் விலகியதை தொடர்ந்து புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
4. ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ரஷித்கான் திடீர் விலகல்
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி தேர்வில் தனது கருத்தை கேட்காததால் அதிருப்தி அடைந்த கேப்டன் ரஷித்கான் பதவியில் இருந்து திடீரென விலகினார்.
5. மாஸ்டர் இந்தி ரீமேக்: சல்மான்கான் விலகல்
மாஸ்டர் இந்தி ரீமேக்: சல்மான்கான் விலகல்.