கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி + "||" + T20 series against Australia: West Indies win by 16 runs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
செயிண்ட்லூசியா, 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 4 ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது.

இந்நிலையில் 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணியில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 34 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் பூரன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். 

இதனையடுத்து 20 ஓவரில் 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆரோன் பின்ச் மட்டும் 34 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரல் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று அசத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
3. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு : 188 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது இங்கிலாந்து ..!
5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது
4. பெண் ரோபோவை மணக்கும் நபர்! மோதிரம் மாற்றிகொண்டார்
தனிமையை போக்க பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய நபர்
5. சிட்னி டெஸ்ட்: பரபரப்பான போட்டியை போராடி "டிரா" செய்த இங்கிலாந்து
5-ஆம் நாளின் கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது.