கிரிக்கெட்

3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா + "||" + 3rd T20 match India set a target of 82 for Sri Lanka

3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா

3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு,

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் உதனாவிற்கு பதிலாக பாத்தும் நிசாங்கா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் நவ்தீப் சயினிக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரமேஷ் மெண்டிஸ் சுழலில் தேவ்தத் படிக்கல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வனிந்து ஹசரங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். அதே ஓவரில் ருதுராஜ் கெய்க்வாடும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, நிதிஷ் ராணாவும் 6 ரன்களுக்கு தசுன் ஷனாகாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

நீண்ட நேரம் களத்திலிருந்த புவனேஷ்வர் குமார் 32 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு வந்தவர்களும் அதிக நேரம் நிலைத்து நிற்கவில்லை. குல்தீப் யாதவ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை தரப்பில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஷனாகா 2 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் மற்றும் சமீரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 82 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. எங்கு இருக்கிறார் மகிந்த ராஜபக்சே? திடீர் என இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
2. இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படுகிறது
சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
3. இலங்கையில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக இலங்கையில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
4. ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
5. இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது
இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.