கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி + "||" + 20 over cricket against New Zealand: Bangladesh win

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக வில் யங் 46 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். வங்காளதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நசும் அகமது, வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மக்முதுல்லா 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முதல்முறையாக கைப்பற்றியதுடன், 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!
நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக திடீரென அதிகரித்து வருகிறது.
2. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்துள்ளது.
3. நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கப்டில், வில் யங் சதமடித்து அசத்தல்
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மார்டின் கப்டில், வில் யங் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
4. நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 இன்று நடைபெற இருந்தது
5. நியூசிலாந்தில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி
நியூசிலாந்தில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.