சரிவில் இருந்து மீளுமா மும்பை?


சரிவில் இருந்து மீளுமா மும்பை?
x
தினத்தந்தி 27 Sep 2021 11:57 PM GMT (Updated: 27 Sep 2021 11:57 PM GMT)

ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

2-வது கட்ட ஆட்டத்தில் மும்பை அணி இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை. தொடர்ச்சியாக சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் உதை வாங்கியது. மிடில் ஆர்டர் பேட்டிங் எதிர்பார்த்தபடி சோபிக்காததால் மும்பை அணி விழிபிதுங்கி நிற்கிறது. வலுவான அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வரும் திட்டத்துடன் நிச்சயம் களம் இறங்கும் என்று நம்பலாம்.

லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப் அணி கடைசி 2 ஆட்டங்களில் ஒன்றில் ராஜஸ்தானிடம் பணிந்தது. மற்றொன்றில் ஐதராபாத்தை அதட்டியது. மும்பைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இருந்தது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்க அதிக வாய்ப்புள்ளது.


Next Story