கிரிக்கெட்

ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் கருத்து + "||" + Smriti Mandhana can be appointed India captain after Women's World Cup: WV Raman

ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் கருத்து

ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் கருத்து
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பெண்கள் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான டபிள்யூ.வி.ராமன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது,  ‘அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை 25 வயதான ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும். கேப்டன்ஷிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது. அவரால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆட்டத்தின் போக்கை நன்கு கணித்து செயல்படக்கூடியவர். இந்திய அணிக்காக நீண்ட நாள் விளையாடி வருகிறார்’ என்று கூறினார்.

தற்போது இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக 38 வயதான மிதாலிராஜூம், 20 ஓவர் அணியின் கேப்டனாக 32 வயதான ஹர்மன்பிரீத் கவுரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.