கிரிக்கெட்

ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி + "||" + I will play for Bangalore team till the last as a player: Virat Kohli

ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி

ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி
ஒரு வீரராராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் .
 
சார்ஜா 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
.
டாஸ் வென்ற பெங்களூரு அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது  .அதன்படி முதலில்   பேட்டிங்  செய்த பெங்களூரு அணி  20  ஓவர்கள்  முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டிங்  செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.4ஓவர்களில்  139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

போட்டிக்கு பிறகு  பெங்களூரு  கேப்டனாக கடைசி போட்டியில் விளையாடியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 

 விராட் கோலி அளித்த பேட்டியில் ;

என்னால் முடிந்த அளவு அணிக்காக செய்திருக்கிறேன். என்னை  பொறுத்த 
வரை விசுவாசம் முக்கியமானது.பெங்களூரு  அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன். அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன்.

பெங்களூர் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன்.
  
 இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்: பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த பிராவோ சாதனையை சமன் செய்திருக்கிறார் ஹர்சல் பட்டேல்
2. அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் ..
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார் .
3. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
4. ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
5. “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” - விராட் கோலி திடீர் அறிவிப்பு
இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.