டோனியைப் போல ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை: ரிஷப் பண்டுடன் கோலி கலந்துரையாடல்


டோனியைப் போல ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை: ரிஷப் பண்டுடன் கோலி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 15 Oct 2021 11:40 AM GMT (Updated: 15 Oct 2021 12:34 PM GMT)

விராட் கோலியும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடும் விளம்பர வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

துபாய் 

20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது . இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்குகிறது.இந்திய அணி தனது  முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும்  24ஆம் தேதி சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடும் விளம்பர வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

அதில் விராட் கோலி , சிக்சர்கள் தான் 20 வது ஓவர் போட்டிகளில் வெற்றியை பெற்று தரும் என ரிஷப் பண்டிடம் கூறுகிறார் . இதற்கு பதில் அளிக்கும் ரிஷப் பண்ட் , கவலைப்படாதீர்கள் நான் தினமும் தீவிர பயிற்சி மேற்கொள்கிறேன். இதற்கு முன்னும் ஒரு விக்கெட் கீப்பர் தான் சிக்சர் அடித்து உலகக்கோப்பையை பெற்று தந்தார் என பதில் அளிக்கிறார்.

பின்னர் ரிஷப் பண்டிடம், டோனியைப் போல ஒரு விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு இன்று வரை கிடைக்கவில்லை என கோலி கூறுவது போன்று அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் டோனி , தொடர் முடிந்த பிறகு உலக கோப்பை இந்திய அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story