கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் ! + "||" + Afghanistan beat West Indies by 56 runs in T20 worldcup warm-up match

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் !

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் !
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
துபாய்,

டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. துபாயில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா சாஸாய் மற்றும் மொஹம்மது ஷாஸாத் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.சாஸாய் 35 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், ஷாஸாத்  35 பந்துகளில் 1 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.


அடுத்து வந்த வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஒபெட் மெக்கொய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, 190 ரன்கள் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக லெண்டல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த சிம்மன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். எவின் லீவிஸ் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையர் 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் வந்த நிகோலஸ் பூரான், ரோஸ்டன் சேஸ்சுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூரான் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சேஸ் 58 பந்துகளில் 1 சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

 இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணியிடம் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் கேப்டன் முகமது நபி 4 ஓவர்கள் வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து  3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார்.
3. ஆப்கானிஸ்தான்: தலீபான்களின் 100 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது...?
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்ற பெண்களுக்கு தடை...! தலீபான்கள் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் பெண்கள் தோன்ற தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.