2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது : ரமீஸ் ராஜா


2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது : ரமீஸ் ராஜா
x
தினத்தந்தி 16 Nov 2021 9:12 PM GMT (Updated: 16 Nov 2021 10:08 PM GMT)

2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

துபாய்,

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது .

அதன் படி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்  ஐசிசி தொடர்களை நடத்துகின்றன .இதில் பாகிஸ்தான் 2025 ம் ஆண்டுக்கான ஐ சி சி சாம்பியன்ஸ் டிராபியை  நடத்துகிறது .1996 ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான்  நடத்தும் தொடர் இதுவாகும் எனவே இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 

2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது .இந்த செய்தி பாகிஸ்தான் ரசிகர்கள், மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.என்று தெரிவித்துள்ளார் 

Next Story