கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு + "||" + South Africa tour: Indian A team bowls brilliantly

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு
இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
ப்ளூம்போண்டைன் , 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளும் மோதும் 2-வது  டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இந்தியப் பந்துவீச்சாளர்களில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
2. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
3. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
4. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
5. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.