இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.... ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.... ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்
x
தினத்தந்தி 12 Dec 2021 10:04 AM GMT (Updated: 2021-12-12T15:34:17+05:30)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என்று நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 71 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,  நடிகர் மம்முட்டி, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷமாகவும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று அதில் சச்சின் பதிவிட்டுள்ளார்.Next Story