ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 16 Jan 2022 2:01 AM GMT (Updated: 16 Jan 2022 2:01 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

கயானா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நாளில் நடந்த லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும், இலங்கை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன. 

2-வது நாளான நேற்று கயானாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 46.5 ஓவர்களில் 232 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 45.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்அவுட் ஆனது. இந்த நிலையில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story