தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்


தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
x
தினத்தந்தி 23 Jan 2022 6:30 PM GMT (Updated: 2022-01-24T00:00:46+05:30)

தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டவுன்,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 

இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி பரபரப்பான இறுதி கட்டத்தில் 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழூமையாக கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை தீபக் சாகரின்ஆட்டம் அமைந்தது. அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சருசன் 54 ரன்களை குவித்தார். இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற அவர் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி கட்டத்தில் தான் அவுட் ஆன நிலையில், இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத தீபக் சாகர் கண்கலங்கிவிட்டார்.


Next Story