இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!


இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!
x
தினத்தந்தி 26 Jan 2022 10:41 PM GMT (Updated: 2022-01-27T04:11:53+05:30)

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தில்ருவான் பெரேரா எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 39 வயதான பெரேரா 43 டெஸ்டுகளில் விளையாடி 161 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 7 அரைசதம் உள்பட 1,303 ரன்களும் எடுத்துள்ளார். அத்துடன் 13 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Next Story