ஐ.பி.எல் கிரிக்கெட்: சரிவில் இருந்து எழுச்சி பெறுமா சென்னை?


ஐ.பி.எல் கிரிக்கெட்: சரிவில் இருந்து எழுச்சி பெறுமா சென்னை?
x
தினத்தந்தி 7 May 2022 10:16 PM GMT (Updated: 7 May 2022 10:16 PM GMT)

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது.

சென்னை அணி எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறி தான். ஏனெனில் மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்து, ரன்ரேட்டிலும் உயரிய நிலையை எட்டினால் ஒருவேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம். மற்றபடி இனி சென்னை அணி கவுரவத்துக்காகத் தான் விளையாட வேண்டி இருக்கும்.

முந்தைய பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் மிடில் வரிசையில் சோடைபோனதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. குறிப்பாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் (10 ஆட்டத்தில் 116 ரன் மற்றும் 5 விக்கெட்) சொதப்பல் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இது போன்ற குறைகளை களைந்தால் சரிவில் இருந்து மீளலாம்.

மாறி மாறி முடிவுகளை சந்தித்து வரும் டெல்லி அணி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்தை 21 ரன் வித்தியாசத்தில் சாய்த்தது. அதில் டேவிட் வார்னர் (92 ரன்), ரோமன் பவெல் (67 ரன்) அட்டகாசப்படுத்தினர். அதே போன்று சென்னைக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுவார்கள். பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ள டெல்லி வீரர்கள் முழுவீச்சில் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Next Story