எப்போதும் எங்கள் அணி வீரர்களிடம் கூறுவது ஒன்றுதான் - லக்னோவுக்கு எதிரான வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் பேட்டி


எப்போதும்  எங்கள் அணி வீரர்களிடம் கூறுவது ஒன்றுதான் - லக்னோவுக்கு எதிரான வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் பேட்டி
x

Image Courtesy: Twitter 

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொஞ்சம் நிம்மதி. வெற்றியை நாங்கள் மோசமாக விரும்பினோம். இந்த வெற்றியை தேடித்தான் நாங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம்.

நான் எப்போதும் எங்கள் அணி வீரர்களிடம் கூறுவது ஒன்றுதான். நாம் சாம்பியன் அணி அதனை கணக்கில் வைத்து விளையாடுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தேன். அதேபோன்று ஒவ்வொரு போட்டியின் போதும் மிகக் கடுமையாக போராட வேண்டும் என்றும் நான் கூறிக் கொண்டே இருந்தேன்.

அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதுமட்டும் இன்றி ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் தங்களது பங்களிப்பினை உணர்ந்து சரியாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஒரு குழுவாக நாங்கள் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தற்போது உள்ள பிளேயிங் லெவனை மிகச் சிறப்பான பிளேயிங் லெவனாக நான் கருதுகிறேன்.

எங்களது அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியில் இருக்கும் வேளையில் தற்போது அணியில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இம்முறை ஜாக் பிரேசர் எங்கள் அணிக்குள் வந்துள்ளது 3வது வரிசை வீரரை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்த வெற்றி தொடரும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story