2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிசீலனை


2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிசீலனை
x

கோப்புப்படம் 

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முயற்சித்து வருகிறது.

லாசானே,

34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம் பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான திட்ட அறிக்கையை சமர்பிக்கும்படி ஐ.சி.சி.யை கேட்டுக் கொண்டுள்ளது. லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், பேஸ்பால், கராத்தே, ஸ்குவாஷ், கிக் பாக்சிங் உள்பட 9 விளையாட்டுகளில் இருந்து சிலவற்றை சேர்க்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதில் எந்த விளையாட்டுகளை சேர்ப்பது என்பது குறித்து அடுத்த ஆண்டு மத்தியில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. ரசிகர்களை அதிகம் கவரும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதால் அந்த ஆட்டம் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற நல்ல வாய்ப்புள்ளது.

1900-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பெற்று இருந்தது. அதில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story