உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் இன்று மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் இன்று மோதல்
x

image courtesy: Proteas Men twitter

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி தேவையாகும்.

இந்த நிலையில் இந்த தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் 23-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல 4 போட்டிகளில் ஆடியுள்ள வங்காளதேசம் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.


Next Story