2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணி...4 இந்திய வீராங்கனைகள் தேர்வு...!


2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணி...4 இந்திய வீராங்கனைகள் தேர்வு...!
x

Image Courtesy: ICC Twitter 

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த பெண்கள் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர், வீராங்கனைகளை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்த வகையில் இன்று வீரர்களின் செயல்பாட்டை வைத்து 2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 அணியை அறிவித்திருந்தது. அதில் இந்தியாவில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த பெண்கள் டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த டி20 அணியில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 4 வீராங்கனைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 வீராங்கனைகளும், நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகளில் இருந்து தலா 1 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த டி20 அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

தொடர்ந்து 3வது மற்றும் 4வது இடத்துக்கு நியூசிலாந்தின் ஷோபி டெவைன் மற்றும் ஆஷ் கார்ட்னெர் ஆகியோரும், 5 வது இடத்தில் ஆஸ்திரேலியாவி தாஹியா மெக்ராத்தும் தேர்வாகி உள்ளனர். 6வது இடத்துக்கு பாகிஸ்தானின் டிடா டாரும், 7 முதல் 11 இடங்களுக்கு இந்தியாவின் தீப்தி ஷர்மா, ரிச்சா ஹோஷ், இங்கிலாந்தின் ஷோபி எக்லெஸ்டோன், இலங்கையின் இனோகா ரனவீராவும், இந்தியாவின் ரேனுகா சிங்கும் தேர்வாகி உள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள இந்த அணிக்கு நியூசிலாந்தின் ஷோபி டெவைன் கேப்டனாகவும், இந்தியாவின் ரிச்சா ஹோஷ் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த பெண்கள் டி20 அணி விவரம்:-

1. ஸ்மிருதி மந்தனா (இந்தியா)

2. பெத் மூனி (ஆஸ்திரேலியா)

3. ஷோபி டெவின் (கேப்டன்) (நியூசிலாந்து)

4. ஆஷ் கார்ட்னெர் (ஆஸ்திரேலியா)

5. தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா)

6. நிடா தர் (பாகிஸ்தான்)

7. தீப்தி ஷர்மா (இந்தியா)

8. ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்) (இந்தியா)

9. சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)

10. இனோகா ரணவீரா (இலங்கை)

11. ரேனுகா சிங் (இந்தியா)




Next Story