இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி - டிக்கெட் விற்பனை தொடக்கம்


இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி - டிக்கெட் விற்பனை தொடக்கம்
x

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான மாஸ்டர்கார்ட் டி-20 தொடரின் முதல் போட்டி வரும் 28-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டின் ஆரம்ப விலை ஆயிரத்து 500 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணம் சலுகை விலையில் 750 ரூபாயாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story