ஐ.பி.எல்.: சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 5 April 2024 1:34 PM GMT (Updated: 5 April 2024 1:44 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. இதனால் இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி உள்ளன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story