ஐ.பி.எல்.: பெங்களூருவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியது என்ன?


ஐ.பி.எல்.: பெங்களூருவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியது என்ன?
x

ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது.

சென்னை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.

ருதுராஜ் கெய்குவாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல்போட்டியிலேயே அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், வெற்றிக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் கூறுகையில்,

முதல் 3 ஓவர்களை தவிர எஞ்சிய ஓவர்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் இருந்தன. 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேக்ஸ்வெல், டூபிளசிஸ் விக்கெட்டுகள் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனை.

கேப்டன்சி பொறுப்பை நான் எப்போதும் ரசித்து மகிழ்ந்தேன். கூடுதலாக எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எனக்கு அனுபவம் உள்ளது. எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. தோனியும் என்னுடன் உள்ளார்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story