மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே


மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே
x
தினத்தந்தி 14 April 2024 2:05 PM GMT (Updated: 14 April 2024 2:08 PM GMT)

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே , ரவீந்திரா களமிறங்கியுள்ளனர்.

மும்பை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கியுள்ளனர். வழக்கமாக ரச்சினுடன் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் தொடக்க வீரராக களமிறங்கும் நிலையில் தற்போது ரச்சினுடன் ரஹானே களமிறங்கி விளையாடி வருகிறார்.


Next Story