ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..!


ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்:  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..!
x

Image : PTI 

தினத்தந்தி 25 Nov 2023 3:29 PM IST (Updated: 26 Nov 2023 2:58 AM IST)
t-max-icont-min-icon

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில், 199 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Next Story