வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
x

Image Courtesy: @ICC

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன.

வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வங்காளதேசத்திற்கு இந்த தொடர் மிகவும் உதவியாக இருக்கும். இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 அணிக்கு சீனியர் வீரரான சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம்; சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அகரம், பிரினா பென்னட், ரியான் பர்ல், ஜொனாதன் காம்ப்பெல், க்ரேக் எர்வின், ஜாய்லாட் கும்பி, லுக் ஜாங்க்வே, கிளைவ் மடாண்டே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளெசிங் முசரபானி, ஐன்ஸ்லி நட்லோவ், ரிச்சர்ட் ங்க்வாரே, சீன் வில்லியம்ஸ்.

போட்டி அட்டவணை விவரம்;

முதல் டி20 போட்டி; மே 3 - சட்டோகிராம்

2வது டி20 போட்டி; மே 5 - சட்டோகிராம்

3வது டி20 போட்டி; மே 7 - சட்டோகிராம்

4வது டி20 போட்டி; மே 10 - டாக்கா

5வது டி20 போட்டி; மே 12 - டாக்கா




Next Story