நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக பந்துவீச்சை பதிவு செய்த மும்பை வீரர்...எவ்வளவு வேகம் தெரியுமா...?


நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக பந்துவீச்சை பதிவு செய்த மும்பை வீரர்...எவ்வளவு வேகம் தெரியுமா...?
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 2 April 2024 5:41 AM GMT (Updated: 2 April 2024 7:17 AM GMT)

ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக பந்துவீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷான் டைட் கடந்த 2011ம் ஆண்டில் பதிவு செய்துள்ளார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி நடப்பு ஐ.பி.எல் தொடரின் அதிவேக பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தின் கடைசி பந்தை 157. 4 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். இதன் மூலம் அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் அதிவேக பந்துவீச்சை பதிவுசெய்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் - லக்னோ இடையிலான ஆட்டத்தின் போது லக்னோவுக்காக அறிமுக வீரராக களம் இறங்கிய மயங்க் யாதவ் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசியது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக பந்துவீச்சாக பதிவானது அந்த சாதனையை கோட்ஸி இரண்டே நாட்களில் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஒட்டுமொத்த ஐ.பி.எல் வரலாற்றில் கோட்ஸியின் இந்த பந்துவீச்சு அதிவேக பந்துவீச்சு பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷான் டைட் கடந்த 2011ம் ஆண்டு 157.71 கி.மீ வேகத்தில் பந்துவீசியதே சாதனையாக உள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக பந்துவீச்சு விவரம்;

ஜெரால்டு கோட்ஸி - 157.4 கி.மீ

மயங்க் யாதவ் - 155.8 கி.மீ

மயங்க் யாதவ் - 153.9 கி.மீ

மயங்க் யாதவ் - 153.4 கி.மீ

நாண்ட்ரே பர்கர் - 153 கி.மீ

ஜெரால்டு கோட்ஸி - 152.3 கி.மீ

அல்ஜாரி ஜோசப் - 151.2 கி.மீ

மதீஷா பதிரானா - 150.9 கி.மீ

ஐ.பிஎ.ல் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சு விவரம்;

ஷான் டைட் - 157.71 கி.மீ - 2011

ஜெரால்டு கோட்ஸி - 157.4 கி.மீ - 2024

லாக்கி பெர்குசன் - 157.3 கி.மீ - 2022

உம்ரான் மாலிக் - 157 கி.மீ - 2022

ஆண்ட்ரிச் நோர்ட்ஜே - 156.22 கி.மீ - 2020

உம்ரான் மாலிக் - 156 கி.மீ - 2022

மயங்க் யாதவ் - 155.8 கி.மீ - 2024


Next Story