மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: மேகனா- ஷபாலி ஜோடி அசத்தல்- இந்திய அணிக்கு 2-வது வெற்றி


மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: மேகனா- ஷபாலி ஜோடி அசத்தல்- இந்திய அணிக்கு 2-வது வெற்றி
x

மலேசிய அணிக்கு எதிராக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.

சில்கெட்,

வங்கதேசத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர் டி20 பார்மெட்டில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி மலேசியாவை எதிர்கொண்டது.

மலேசிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. மேகனா, 69 ரன்கள் குவித்தார். ஷபாலி 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் குவித்தனர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மலேசிய அணி விரட்டியது. 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி நாளை ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடுகிறது.


Next Story