மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; எமி ஜோன்ஸ் அபார ஆட்டம் - நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; எமி ஜோன்ஸ் அபார ஆட்டம் - நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய எமி ஜோன்ஸ் 92 ரன், சார்லோட் டீன் 42 ரன் எடுத்தனர்.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 50 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சார்லோட் டீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. இதையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எமி ஜோன்ஸ் மற்றும் சார்லோட் டீன் இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 209 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய எமி ஜோன்ஸ் 92 ரன், சார்லோட் டீன் 42 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.


Next Story