பெண்கள் பிரிமீயர் லீக்: உ.பி.க்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு...!


பெண்கள் பிரிமீயர் லீக்: உ.பி.க்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு...!
x

Image Courtesy: Twitter 

பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் குஜராத்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.இதில் முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.


Next Story