19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியீடு-இந்தியாவுக்கு 2 ஆட்டங்கள்...!
19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முதலாவது டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
துபாய்,
19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முதலாவது டி20 உலகக்கோப்பை இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி அதிரடி ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜனவரி 14 ந் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 அன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவை ஜனவரி 14ந் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டி தொடருக்கு அனைத்து அணிகளும் சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. பயிற்சி ஆட்டங்கள் வரும் 9ம் தேதி மற்றும் 11ந் தேதி நடைபெறுகின்றன. அதைதொடர்ந்து 14ந் தேதி முதல் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் வரும் 9ம் தேதி ஆஸ்திரேலியாவையும், வரும் 11ம் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் அணி ( 19 வயதுக்கு உட்படோர் ):-
ஷபாலி வர்மா ( கேப்டன்), ஸ்வேதா ஷெராவத் ( துணை கேப்டன் ), ரிச்சா கோஷ் ( விக்கெட் கீப்பர் ), ஜி த்ரிஷா, சவுமியா திவாரி, சோனியா மெஹ்தியா, ஹர்லி ஹாலா, ஹிரிஷிதா பாசு ( வி.கீ), சோனம் யாதவ், மன்னத் காஷயப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் எம்.டி
மாற்று வீரரகள்:- ஷிகா, நஜ்லா சிஎம்சி, யாஷா ஸ்ரீ.