உலகக்கோப்பை கிரிக்கெட்; வரலாறு படைத்த இந்தியா!
உலகக்கோப்பை தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின.
பெங்களூரு,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 410 ரன்களை குவித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128, கேஎல் ராகுல் 102 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காமல் அரையிறுதியில் விளையாட உள்ளது.