உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

துபாய்,

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.

இந்த போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தப் பட்டியலில் 70 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. 53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும், 52.08 சதவீத புள்ளிகளுடன் இந்திய அனி 4-வது இடத்திலும், 51.85 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் உள்ளன.

இறுதியில் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை மற்றும் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை வெவ்வேறானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story