ஜிம்பாப்வே - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு


ஜிம்பாப்வே - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு
x

கோப்புப்படம் 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

சில்ஹெட்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடர் மே 3ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை நடைபெறுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிகள் விவரம்;

முதல் டி20 போட்டி - மே 3 சட்டோகிராம்

2வது டி20 போட்டி - மே 5 சட்டோகிராம்

3வது டி20 போட்டி - மே 7 சட்டோகிராம்

4வது டி20 போட்டி - மே 10 மிர்பூர்

5வது டி20 போட்டி - மே 12 மிர்பூர்


Next Story