கால்பந்து

சூப்பர் கோப்பை கால்பந்து பெங்களூரு அணி சாம்பியன் + "||" + Super Cup Football Bengaluru team champion

சூப்பர் கோப்பை கால்பந்து பெங்களூரு அணி சாம்பியன்

சூப்பர் கோப்பை கால்பந்து பெங்களூரு அணி சாம்பியன்
சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புவனேஸ்வரம்,

முதலாவது ஹீரோ சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நேற்று நடந்தது. இதில் பெங்களூரு எப்.சி.-கிழக்கு பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் கிழக்கு பெங்காலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.கிழக்கு பெங்கால் அணியில் குரோமக் 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ராகுல் பிகெ 39-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 68-வது மற்றும் 90-வது நிமிடத்திலும், நிகோலஸ் பெடோர் 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கிழக்கு பெங்கால் அணி வீரர் சமத் அலி மாலிக் 44-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியது ஆனது.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.
2. புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.
3. கர்நாடகா: திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்
கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. எவ்வளவு நாட்கள் முதல் அமைச்சர் பதவியில் நீடிப்பேன் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை: குமாரசாமி
எவ்வளவு நாட்கள் முதல் அமைச்சர் பதவியில் இருப்பேன் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
5. கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.