கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: சுயகோலால் ஈரானிடம் வீழ்ந்தது மொராக்கோ + "||" + World Cup football: Morocco fell to self-centered Iran

உலக கோப்பை கால்பந்து: சுயகோலால் ஈரானிடம் வீழ்ந்தது மொராக்கோ

உலக கோப்பை கால்பந்து: சுயகோலால் ஈரானிடம் வீழ்ந்தது மொராக்கோ
உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணி சுயகோலால் ஈரானிடம் கடைசி நிமிடத்தில் மண்ணை கவ்வியது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் மொராக்கோ- ஈரான் (பி பிரிவு) அணிகள் சந்தித்தன.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்துள்ள மொராக்கோ அணியே இந்த ஆட்டத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சரி (64 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் சரி (13 ஷாட்) ஈரானை விட மொராக்கோவின் கை ஓங்கி நின்றது. கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு கோட்டை விடுவதுமாக ஆட்டத்தின் போக்கு அமைந்தது. மொராக்கோ முன்னணி வீரர் ஹகிம் ஜியேச் அடித்த சூப்பரான ஒரு ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அலிரெஜா பிரன்வன்ட் பாய்ந்து விழுந்து தடுத்து தன்னை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில், வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் தான் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டது.

அந்த சமயத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் இடது கார்னருக்கு பக்கத்தில் இருந்து ஈரான் வீரர் ஹாஜிசபி கோல் நோக்கி உதைத்தார். அதை வலைக்கு வெளியே தள்ளிவிடும் நினைப்புடன் மொராக்கோ அணியின் மாற்று ஆட்டக்காரர் அஜிஸ் போவ்ஹட்டோஸ் தலையால் அதிவேகமாக முட்டினார். ஆனால் துரதிர்ஷ்டம் பந்து நேராக வலைக்குள் செல்ல, அது சுயகோலாக மாறியது.

இதனால் ஒரு கனம் மொராக்கோ வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 31 வயதான போவ்ஹட்டோஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

முடிவில் ஆசிய அணியான ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. உலக கோப்பை போட்டியில் ஈரானின் 2-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் கபடி இறுதி ஆட்டம்: ஈரானிடம் இந்திய அணி தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது
ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் பரபரப்பான ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணி ஈரானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
2. ஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
ஆசிய விளையாட்டுப்போட்டி கபடி பிரிவில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
3. எந்த முன் நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : டொனால்டு டிரம்ப்
எந்த முன் நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
4. அமெரிக்காவை மிரட்டினால் பேரழிவை சந்திக்க நேரிடும் - ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் காணாத பேரழிவை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
5. நீங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
எப்போதும் அமெரிக்காவை அச்சுறுத்தி கொண்டு இருந்தால் நீங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரானுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #DonaldTrump