கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள் + "||" + Todays matches in World Cup football

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

*‘எப்’ பிரிவில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த உலக சாம்பியன் ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை கடைசி நிமிடத்தில் கோல் போட்டு வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் தென்கொரியாவை சாய்த்தால் மட்டுமே ஜெர்மனியால் அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதே சமயம் சுவீடன் தனது கடைசி லீக்கில் மெக்சிகோவை தோற்கடித்தால் அதன் பிறகு ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இரண்டு அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். சுவீடன் தோல்வியை தழுவினால், ஜெர்மனிக்கு சிக்கல் விலகி விடும்.

*‘இ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி தனது கடைசி லீக்கில் செர்பியாவுடன் டிரா செய்தாலே 2-வது சுற்றை அடைந்து விடலாம். ஆனால் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். செர்பியாவை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். இதே பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள மற்றொரு அணியான சுவிட்சர்லாந்துக்கும் தங்களது இறுதி லீக்கில் (கோஸ்டாரிகாவுடன்) டிரா கண்டாலே அடுத்த சுற்று கதவு திறந்து விடும். தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட கோஸ்டாரிகாவை, சுவிட்சர்லாந்து அணி வெல்வதற்கு கணிசமான வாய்ப்புள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு
பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் என ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.
2. தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்
தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று பிபா தெரிவித்துள்ளது. #FIFA
3. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.
4. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்
எகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.
5. 18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)
இந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது.