கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு? + "||" + ISL Football: Madras team's pity continues - coach's decision to resign?

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. எரிக் பார்தலு (14-வது நிமிடம்), சுனில் சேத்ரி (25-வது நிமிடம்) செம்போ ஹாவ்கிப் (84-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். 4-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு முதலாவது வெற்றியாகும். முந்தைய 3 ஆட்டங்களையும் ‘டிரா’ செய்திருந்தது. நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியான சென்னையின் எப்.சி. 3 தோல்வி, ஒரு ‘டிரா’ என்று ஒரு புள்ளி மட்டுமே எடுத்து பரிதாபமாக கடைசி இடத்தில் தொடருகிறது.


தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான்கிரிகோரி (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இன்னொருவர் பொறுப்பை ஏற்க இது சரியான நேரமாக இருக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்தை 1-0 என்ற புள்ளி கணக்கில் கோவா அணி வீழ்த்தியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி முதல் தோல்வியை சந்தித்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து கோவா அணி தப்பியது.