கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா


கோவா எப்.சி. அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 March 2021 3:11 AM GMT (Updated: 19 March 2021 3:11 AM GMT)

கோவாவில் நடந்த 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த 13-ந் தேதி முடிவடைந்தது.

கோவா, 

இதில் மும்பை சிட்டி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. எப்.சி.கோவா அணி அரைஇறுதியில் ‘பெனால்டி ஷூட்-அவுட்’டில் 5-6 என்ற கோல் கணக்கில் மும்பையிடம் தோல்வி கண்டு 4-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளரான 40 வயது ஜூவான் பெர்னாண்டோவுக்கு (ஸ்பெயின்) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும், அந்த அணியின் வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது என்றும் கோவா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story