கால்பந்து

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து + "||" + World Cup qualifiers: Brazil-Argentina match canceled

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்-அர்ஜென்டினா ஆட்டம் ரத்து.
சாபாலோ,

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் அடுத்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சாபாலோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கைவிடப்பட்டது. அர்ஜென்டினா அணியில் இடம் பிடித்து இருந்த 4 வீரர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காமல் களம் இறங்கியது தெரியவந்ததை அடுத்து பிரேசில் நாட்டு சுகாதார அதிகாரிகள் போட்டி நடைபெறும் இடத்துக்கு நேரில் வந்து போட்டியை நடத்தும் அமைப்பு குழுவினருடன் கலந்து பேசி போட்டியை அதிரடியாக நிறுத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிரேசில் சுகாதார அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இந்த போட்டி மீண்டும் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. நடந்த சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கும் உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) போட்டி அதிகாரிகள் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரீமியர் லீக் கால்பந்து : ரொனால்டோ ஹாட்ரிக் கோல் - மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - நார்விச் சிட்டி அணிகள் மோதின
2. ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டி: முதல் முறையாக வெற்றி பெற்ற இந்திய அணி
சவுதி அரேபியாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் மும்பை கிளப் அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
3. 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது
4. எனது ஓய்வு முடிவு குறித்து நான் தான் முடிவுசெய்வேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து விளையாட விருப்பமில்லை என்றால், எனது ஓய்வு முடிவை நானே அறிவிப்பேன் என்று ரொனால்டோ கூறியுள்ளார்.
5. நட்புறவு கால்பந்து போட்டி: இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதல்
சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணியுடன் மோதுகின்றது.