கோவா: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை!


கோவா: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை!
x
தினத்தந்தி 29 Dec 2021 2:39 AM GMT (Updated: 29 Dec 2021 2:41 AM GMT)

கோவா தலைநகர் பனாஜியில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பனாஜி,

கோவா தலைநகர் பனாஜியில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்து கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில்,

“இளைஞர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்திலும் நாட்டிலும் கால்பந்து விளையாட்டை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

எங்கள் குழந்தைகள் இந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரை போல் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அவர் கால்பந்து விளையாட்டில் ஒரு  உலக ஜாம்பவான்”

இவ்வாறு மந்திரி மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அவர் யூ ஈ எப் ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரில் 140 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 5 முறை ‘பேலண்-டி-ஓர் விருதை’ வென்றுள்ளார். இந்த விருதை அதிக முறை பெற்றுள்ள ஐரோப்பாவை சேர்ந்த கால்பந்து வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 

சர்வதேச கால்பந்து போட்டிகளில் 115 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் 36 வயதான ரொனால்டோ, சிலை வைக்கும் அளவுக்கு முற்றிலும் தகுதியான நபர் ஆவார்.

Next Story