பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பான் மற்றும் தென்கொரியா காலிறுதிக்கு தகுதி!


பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பான் மற்றும் தென்கொரியா காலிறுதிக்கு தகுதி!
x
தினத்தந்தி 25 Jan 2022 2:30 AM GMT (Updated: 25 Jan 2022 2:30 AM GMT)

‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் தென்கொரியா அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

புனே,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியிலுள்ள 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி  போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் 2023-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் இந்திய அணியின் கனவு கலைந்தது.

இந்த நிலையில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் தென்கொரியா அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற ‘சி’ பிரிவு போட்டியில், நடப்பு சாம்பியனான ஜப்பான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியை அபாரமாக வீழ்த்தியது. இதன்மூலம், அந்த அணி 6 புள்ளிகள் பெற்று ‘சி’ பிரிவில் முதலிடம் பெற்றது.

மற்றொரு ‘சி’ பிரிவு போட்டியில், தென்கொரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மியான்மர் அணியை தோற்கடித்தது.

இதனையடுத்து, ஜப்பான்-கொரியா அணிகள் இடையேயான போட்டி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பையை 2014 மற்றும் 2018ம் ஆண்டில், தொடர்ந்து 2 முறை ஜப்பான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story