ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
x

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜே.ஆர்.டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கால்பந்து ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 16 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 14 ஆட்டங்களில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 3 வெற்றி, 6 டிரா, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story