ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - கோவா அணிகள் ஆட்டம் டிரா..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட்  - கோவா அணிகள் ஆட்டம் டிரா..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் தொடங்கிய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - எப்.சி. கோவா அணிகள் மோதின. ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.


Next Story