மெர்டேக்கா கால்பந்து தொடர்; தஜிகிஸ்தான் அணி சாம்பியன்..!!


மெர்டேக்கா கால்பந்து தொடர்; தஜிகிஸ்தான் அணி சாம்பியன்..!!
x

கோப்புப்படம்

மெர்டேக்கா கால்பந்து தொடரில் மலேசிய அணியை வீழ்த்தி தஜிகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கோலாலம்பூர்,

42-வது மெர்டேக்கா கால்பந்து தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதலில் மலேசியா, இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம் பெறுவதாக இருந்தது. இதில் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியது.

பாலஸ்தீனம் விலகிய நிலையில், மலேசியா கால்பந்து சங்கம், இந்த தொடர் இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய மூன்று அணிகளுடன் நாக்-அவுட் முறையில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி நடைபெற்ற அரையிறுதியில் மலேசியா 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மலேசியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தஜிகிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தஜிகிஸ்தான் அணி தரப்பில் அந்த அணியின் வீரர்கள் ருஸ்டம் சொய்ரோவ் மற்றும் ஷரோம் சமியேவ் தலா ஒரு கோல் அடித்தனர். தஜிகிஸ்தான் அணி மெர்டேக்கா கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story