பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி - பெங்களூருவில் நடக்கிறது


பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி - பெங்களூருவில் நடக்கிறது
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, லெபனான், குவைத், பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்காளதேசம், மாலத்தீவு ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. லெபனான், குவைத் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்கின்றன. தெற்காசிய போட்டியை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற கேள்விக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன் பதிலளிக்கையில், 'தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த மண்டல பிரிட்ஜ் (சீட்டாட்டம்) போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றார்.


Next Story