தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணி 3-வது இடம் பிடித்தது - திருச்சி வீரர் இந்திய அணிக்கு தேர்வு


தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணி 3-வது இடம் பிடித்தது - திருச்சி வீரர் இந்திய அணிக்கு தேர்வு
x

தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய திருச்சி வீரர் பிரணவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி:

14-வது ஜூனியர் தேசிய ஐவர் கால்பந்து (புட்சல்) போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பில் திருச்சியில் இருந்து பயிற்சியாளர் முகமதுபர்தீன் தலைமையில் வீரர்கள் பிரணவ், யோகேஷ்வரன், முகமது சமீர், சிவசோமு, குருதேவ், பரணிதரன், இலக்கியன், ஜாபர், ஜமால், கிறிஸ்டோபர் ஜோயல் ஆகிய 10 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அணி 3-வது இடம் பிடித்தது. தமிழக அணி வீரர்கள் யோகேஷ்வரன், முகமதுசமீர் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சியை சேர்ந்த வீரர் பிரணவ் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்ற வீரர்கள் நேற்று இரவு ரெயில் மூலம் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை பெற்றோர்கள் மற்றும் தமிழ்நாடு புட்சல் கால்பந்து கழகத்தினர் வாழ்த்தி வரவேற்றனர்.


Next Story